தமிழ்ச் சமுதாயத்தில்
வரையறுக்கப்பெற்றுள்ள, அக இலக்கண மரபுகள் என்பன தனித்தன்மை வாய்ந்தன.
தமிழர்கள் தங்களுக்கு அமைத்துக்கொண்ட இல்வாழ்க்கை முறையின் செறிவுகள் அக
இலக்கண மரபுகளாக உறுதிப்படுத்தப்பெற்றன. தமிழ் இலக்கண நூல்களில் அகத்திணை
பற்றிய பொதுவான செய்திகள் தரப்பெற்று, அதன் பின்னர் களவு, கற்பு என்று
இரண்டு வாழ்க்கை முறைகள் அமைத்துக் கொள்ளப்பெற்றுள்ளன. அகத்திணை பற்றிய
பொதுவான செய்திகள் என்பதில் முக்கிய இடம்பெறுவன குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை போன்ற திணைப் பகுப்புகள் ஆகும்.
இவற்றிக்கென தனித்த இடம், பொருள், ஒழுக்கம் உண்டு. அவை காலந்தோறும்
மாற்றமடையாமல் ஏற்கப்பட்டு வருகின்றன. தற்போது இவ்வொழுக்க நடைமுறை தளர்ந்து
அனைத்து நிலமும் ஒன்று கலந்து நின்றாலும் படிக்கவும் பண்பாட்டை அறிந்து
கொள்ளவும் இவை அடையாளங்களாக நிற்கின்றன.
இதற்கு நிலையில் கைகோள் எனப்படும் இரு
வாழ்க்கை நிலைகளை அக இலக்கண நூல்கள் காட்டுகின்றன. கைக் கொள்ளப்பெறும்
வாழ்க்கை முறை கைகோள் ஆகின்றது. காதல் சார்ந்த வாழ்க்கை முறை களவு எனவும்,
திருமணம் முடிந்து இல்லறத்தை நல்லறமாக வாழும் கணவன் மனைவி வாழ்க்கை முறை
கற்பு எனவும் கொள்ளப்பெறுகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment