நீங்கள் தேடும் ஒவ்வொன்றும் உங்கள்
அருகில் தான் இருக்கிறது, ஆனால் என்ன, நீங்கள் அதை உணர மறுத்திடும் பொழுது
அவற்றை விட்டு நீங்கள் விலகி வந்துவிட்டு, அவை விலகிப் போய்விட்டதென
நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். எது வேண்டும் என்பதில் உள்ள தெளிவின்மையே
இதற்குக் காரணம் என்று சொல்வதும் உண்டு. நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு அதிகமாக
உங்களுக்குள் இருக்கிறதோ அவ்வளவு அதிகமான நல்ல செயல்கள் உங்கள் வாழ்வைச்
சுற்றி நடக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதைத்தான் சிக்மண்ட் பிராய்ட்
என்ற உளவியல் மேதை கூறுகிறார். ஆகவே இது எங்கிருக்கிறதோ? எப்பொழுது
கிடைக்குமோ? என்றில்லாமல், இங்கேதான் இருக்கிறது இப்பொழுதிருந்தே அது
எனக்கு வந்துவிட்டது என்பதை நீங்கள் நினைக்கும் பொழுது அதை நிச்சயம்
நீங்கள் அடைந்து அனுபவிப்பீர்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
காசு பணம் எல்லாமும் இருந்தாலும் நீங்கள்
எதை அடைய வேண்டுமோ அவற்றின் மீதான ஆவலே உங்களை அதைப் பெற வைக்கிறது. காசு
பணம் இருக்கிறது என்பதற்காக நீங்கள் எதையும் வாங்கிவிடுவதில்லை என்பதும்
நிதர்சனமான உண்மை. அந்த ஆவலை நேர்மறையான எண்ணங்கள் மூலமாக
வரவழைத்துக்கொண்டு
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment