தனது காதல் துணையைத்தொடர்பு கொள்ள
நினைத்தபொழுதே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியாகவோ, அல்லது உரையாடலாகவோ,
அல்லது காணொளி மூலம் பேசும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலம்
இது. ஆனால் அக்காலத்துக் காதலர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்ததில்லை. தங்கள்
காதலை மடல்கள் வழி தெரிவித்தனர். தமிழிலக்கியத்தில் தலைவன் தலைவியின்
காதலை வளர்ப்பதில் தோழன் தோழியரது பங்கும் பெரும் பங்கு. தோழியும்,
தோழனும், விறலியும், பாணனும் காதலர்களின் காதல் கைகூட தூது சென்ற வண்ணம்
இருந்தனர்.
மனிதர்களைத்
தவிர்த்து கிளி, மேகம், அன்னம் என்று பலவற்றையும் காதலர்கள்
தூதனுப்பியதாகவும் பாடல்கள் உள்ளன. உண்மையில் அவை செய்தியைக் கொண்டு
சேர்த்தன என்று சொல்ல வழியில்லை. அது ஒருவகை உளவியல் அணுகுமுறை. தனது
மனத்தில் உள்ள காதலை பெற்றோரிடமோ, தோழியிடமோ தெரிவித்து, தலைவன் அல்லது
தலைவி மீது தான் கொண்ட அன்பை வெளிப்படையாக சொல்லத் தயங்கும் நேரத்தில்
கிளி, அன்னம், மயில் போன்று பதில் ஒலி எழுப்பக்கூடிய பறவைகளிடமோ; அல்லது
மேகம், தென்றல், அலை போன்று தன்போக்கில் கடந்து செல்வனவற்றிடம் தூது சொல்லி
தங்கள் மனநினைவுகளை அசைபோடும் முறையின் வெளிப்பாடு அது. அன்னம், மயில்,
கிளி, முகில், நாரை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்பன தூதாக
அமைத்துப் பாடுவதற்குச் சிறந்தவை என்பது தமிழறிஞர்கள் கருதியுள்ளதாகத்
தெரிகிறது. தமிழ் கூட தூது செல்வதாக இலக்கியம் உண்டு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment