திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள நெடுஞ்சாலையின் மோசமான நிலையினால் கடந்த ஆறு மாதங்களாக விபத்து அதிகரித்து வருகின்றது.
விலை மதிக்க முடியாத மனித உயிரின்
இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, கடந்த வாரம்
நெல்லை மாவட்டம் மாறாந்தை என்னும் ஊரின் அருகில் ஏற்பட்ட விபத்தினால் ஆறு
நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
மரணப் படுக்கையில் உள்ள குழியினைப்
போன்று, போக்குவரத்து அதிகமுள்ள ஒரு நெடுஞ்சாலையின் மோசமான நிலையினைக்
கண்டு தினந்தோறும் அலுவலகத்திற்கு பணிக்காக பேருந்தில் பயணம்
செய்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் மனம்
குமுறுகின்றனர், ஒரு அரசினை மக்களாகிய நாம் எதற்காக தேர்ந்து எடுக்கிறோம்
என்ற அக்கறை ஆளும் அரசின் மனதிலும், அரசு அதிகாரிகளின் மனதிலும் உள்ளதா
என்னும் கேள்வி ஒவ்வொரு மனிதரின் மனதிலும் எழாமல் இல்லை.
மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசு
அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து, அதனை நிறைவேற்றித் தருவது அரசின்
தலையாய கடமை என்பதை எப்போது உணரப் போகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment