முன்பெல்லாம் சாதாரணமாக வீடுகள், வீதியோர
மரங்கள், ஆலய சுவர்கள் என பார்க்க முடிந்த சிட்டுக் குருவிகள் இப்போது
அரிதினும், அரிதாகி விட்டது. இதற்குக் காரணம் செல்லிடைப் பேசியின் கதிர்
வீச்சு, விவசாய நிலங்கள் குறைந்தது, சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்கள்
அழிக்கப்பட்டது என ஆயிரம், ஆயிரம் காரணங்களை முன்வைக்கிறார்கள் சுற்றுசூழல்
ஆர்வலர்கள்.
இதன்
விளைவு இப்போது சிட்டுக்குருவிகளை அதிகம் காண்பதற்கே இல்லாமல் போய்
விட்டது. இதற்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக
நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் சர்வ சாதாரணமாக சிட்டுக்குருவிகளைக்
காணமுடிகிறது. அதற்குக் காரணம் நாகர்கோவில் அப்டா சந்தையில் உள்ள
வியாபாரிகள் என்பது தான் ஆச்சர்யமே! அதற்கு பாதை போட்டு கொடுத்துள்ளது
குமரி மாவட்ட இயற்கையின் நண்பர்கள் என்னும் அமைப்பு. தமிழக அளவில்
விவசாயிகளும், வியாபாரிகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில்
உருவாக்கிய சந்தை இந்த அப்டா தான்! அதில் தான் இப்போது சிட்டுக் குருவிகள்
அட போட வைக்கின்றது.
இது எப்படி சாத்தியமானது?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment