கட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்
(தொடர்ச்சி)
(தொடர்ச்சி)
இப்படிப் பொருளாதாரத்துக்குச் சக்தியை
அளித்தாலும், 1996 தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. பின்னர் குறுகிய கால
அரசாங்கங்கள் சில அமைந்ததன் பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ)
முதன்மைக் கட்சித்தலைவரான அடல் பிஹாரி வாஜ்பேயி, 1999 அக்டோபர் 13 அன்று
பிரதமர் ஆனார்.
பி ஜே பி அரசு
சுதேசி, ஒருங்கிணைந்த மானிடம் என்ற
மூன்றாவது வழி ஆகியவற்றின்மீது விசுவாசம் கொண்டதாகக் காட்டிக் கொண்டாலும்,
பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசாங்கம், 1991இல் காங்கிரஸ் அரசாங்கம்
இயக்கிவிட்ட நவதாராளமயச் சீர்திருத்தங்களை மிகுந்த உற்சாகத்தோடு
முன்னெடுத்துச் சென்றது.
அதிகாரத்தில் இல்லாத காலத்தில், பிஜேபி,
உள்நாட்டு தாராளமயமாக்கல் (அதாவது, தனியார்மயமாக்கல்) என்பதைத் தான்
ஆதரிப்பதாகவும், அயல்நாட்டுப் போட்டியிலிருந்து இந்தியப் பெருவணிகங்களைக்
காப்பாற்றும் நோக்கில் அயல்நாட்டு தாராளமயமாக்கலை (அதாவது, உலகமயமாக்கலை)
எதிர்ப்பதாகவும் விளக்கம் கூறியது.
ஆனால் அதிகாரத்துக்கு வந்துவிட்ட
நிலையில், தனது இந்தியத் தொழில் பாதுகாப்புக்கொள்கையை அது கைவிட்டது,
பொருளாதாரத்தின் முக்கியப் பகுதிகளான நுகர்வோர் பொருட்கள், மின் உற்பத்தி,
தகவல்தொழில்நுட்பம், காப்பீட்டுத் தொழில்துறை ஆகியவற்றையும்
அயல்நாடுகளுக்குத் திறந்துவிட்டது, அறிவுத்துறை உரிமைச் சட்டங்களையும்
தாராளப்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக, பிஜேபி அரசாங்கம்,
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட, கல்வித்துறைத் தனியார்மயமாக்கலை
எல்லாத் தளங்களுக்கும் கொண்டுசென்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment