தலைமை ஆசிரியரிடமிருந்து சுற்றறிக்கை
வந்திருந்தது. இந்த ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில்
பல்வேறு போட்டிகள் நடத்தப்பெறுகிறது; ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்,
வெற்றி பெறுவோர்க்குப் பரிசுகள் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்; பெயர்தர நாளை
கடைசிநாள். இதுதான் சுற்றறிக்கையின் சாராம்சம். எட்டாம் வகுப்பு
மாணவர்களுக்கான வகுப்பறை அது. வகுப்பாசிரியர் அறிக்கையை ஒரு முறை உரக்க
வாசித்துவிட்டு நிமிர்ந்தார். சில மாணவர்கள் எழுந்து போட்டித்தலைப்புகளின்
கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்தனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி
இரண்டிலும் பெயர்தர முத்து எழுந்தான்.
அவர்கள் சொல்வது உண்மைதான்,
முத்துவிற்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிலும் ஆர்வம் அதிகம்.
ஒவ்வொரு முறை போட்டி அறிவிக்கப்படும்போதும் அவன் அதில் தவறாமல்
கலந்துகொள்வான். இருந்தும் என்ன பயன்? ஒவ்வொரு முறையும் அவனது
வகுப்புத்தோழர்களான கார்த்திக், விக்னேஷ் இருவரும் பரிசைத் தட்டிச்
சென்றுவிடுவார்கள். இப்படி பரிசு கிடைக்காமல் தோற்று ஏமாந்து
போவதைக்காட்டிலும் பேசாமல் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிடலாம்
என்று அவன் எண்ணியதுண்டு. இப்போது நண்பர்களின் கேலியும் அவனைச் சீண்டவே,
பெயர் கொடுக்க எழுந்தவன் பெயர் கொடுக்காமல் உட்கார்ந்துவிட்டான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment