மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சகம், இந்தியாவின் கல்வித்துறையை மறு சீரமைப்பு செய்வதற்காக ஒரு
குழுவை அமைத்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் வரைவு அறிக்கையை
தயார்செய்து பொதுமக்களின் பார்வைக்கும், மேலான கருத்துக்களுக்குமாக முன்
வைத்திருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் போலவே மத்திய அரசு எது செய்தாலும்,
அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், மாநிலங்களுக்கு எதிராகவே
என்னும் ரீதியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பின் முன்னணியில்
இருப்பது அரசியல் கட்சிகள். பின்னர் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள்.
மிக விரைவில் ஆசிரியர்களும் இதில் சேர்ந்து விடுவதை எதிர்பார்க்கலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கைகளுக்கான
குழுவின் அறிக்கை கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப்
பல்கலைக்கழகத்தின் (NUEPA) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த
நிறுவனம்தான் தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் செயலக அலுவலகமாக
பணியாற்றியிருக்கிறது. கல்வித்துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை அதன்
இணையதளத்தில் பார்வைக்கு உள்ளது. ஆகஸ்ட்-16 ஆலோசனைகள் அளிப்பதற்கான கடைசி
தினம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment