தமிழக சட்டபேரவை கூட்டம், நடக்க ஆரம்பம் ஆனதில் இருந்தே வெளிநடப்பு என்ற ஒன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த
சட்டப் பேரவை கூட்ட விவாதத்தின்போது, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளும் சரி,
எதிர் கட்சிகளின் நடவடிக்கைகளும் சரி திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.
ஒவ்வொரு துறை ரீதியான விவாதத்தின் போதும்,
இது எங்களுடைய ஆட்சிக் காலத்தில் நடந்தது, உங்களுடைய ஆட்சிக் காலத்தில்
என்ன செய்தீர்கள் என்னும் குழாயடிச் சண்டைதான் நடந்து கொண்டிருக்கின்றது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்
பிரதிநிதிகளாகிய நாம், நம்முடைய தொகுதியின் தேவை என்ன, அடுத்து மக்களுக்கு
என்ன நலத்திட்ட உதவிகளை செய்யலாம், அரசின் நலத் திட்டங்கள் அனைத்து
மக்களுக்கும் கிடைத்துள்ளதா என்று பார்க்காமல், ஒருவரை ஒருவரை சரமாரியாக
குற்றம் சுமத்திக் கொண்டு, சட்டப் பேரவையின் பொன்னான நேரத்தை
வீணடிப்பதுதான் தங்கள் நிலைப்பாடாகக் கொண்டுள்ளனர் என்பதை அழுத்தம்,
திருத்தமாக நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment