Wednesday 28 September 2016

இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு உணவு


siragu-french-food2
உணவு மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்று. நெருப்பு கண்டறியப்படும் முன் மாமிசம், காய், கனி, கிழங்கு வகைகள் பச்சையாக உண்ணப்பட்டன. பின் சமைத்து சாப்பிடும் வழக்கம் உண்டானது.
காலப்போக்கில் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் மட்டுமல்லாமல், வியாபார நோக்கத்துடன் உணவு விற்பனை துவங்கியது. சுவைப்பவரின் விருப்பமறிந்து உணவு தயாரிக்கும்போது அதற்கு வரவேற்பு கிடைக்கும். உணவகங்களின் வளர்ச்சி இதை அடிப்படையாகக் கொண்டது.
siragu-french-food3

உணவகங்களில் சாப்பிடும்போது நம்மை மிகவும் கவர்ந்த உணவு வகைகளை வீட்டில் செய்து பார்ப்பதுண்டு. அதன் சுவையை உணவகங்களில் வழங்கப்படும் சுவையோடு ஒப்பிட்டுப் பார்த்து கவலை கொள்கிறோம். பின் நாம் சமைத்த உணவே ஆரோக்கியமானது போன்ற ஏதோவொரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 27 September 2016

இலக்கியம் படியுங்கள் !!


siragu-ilakkiyam2

இப்போது இருக்கும் காலங்களில், பள்ளிகளில் தொழில் நுட்பத்திற்கு மற்றும் மருத்துவத் துறைக்குத் தேவையான பாடங்களை மட்டுமே விரும்பிக் கற்பிக்கும் – கற்கும் சூழல் இருக்கின்றது. ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிப்பாடங்களை மாணவர்கள் மதிப்பெண்களுக்காக கற்கின்றனரே தவிர்த்து விருப்பத்தோடு மாணவர்கள் கற்பதில்லை. அதிலும் தமிழ் மொழிப்  பாடத்தினை எட்டாவது படிக்கின்ற போதே நிறுத்திவிட்டு, நிறைய மாணவர்கள் பிரெஞ்சு அல்லது இந்தி மொழிப்பாடங்களை மதிப்பெண்களுக்காக எடுத்துப் படிப்பதை நாம் பார்க்கின்றோம். மொழிப் பாடங்கள் கற்பதினால் எந்தப் பயனும் இல்லை என்றே இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் நம்புகின்றனர். உண்மையில் ஒரு மொழியைப் படிக்கிறபோது அந்த மொழியில் இருக்கும் இலக்கிய, இலக்கணங்களை கற்கின்றபோது படிப்போரை அது வேறு ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்பதே உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 26 September 2016

அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு எப்போது வைப்போம் முற்றுப்புள்ளி?


நெய்யாறு பிரச்சினைக்கு மாற்றுவழி காட்டும் முல்லையாறு அணைத் திட்டம்.
siragu-neyyaaru4

தமிழகம், கர்நாடக மாநிலங்கள் பதை பதைத்துக் கிடக்கின்றது. நீதிமன்ற வழிகாட்டுதலையும் தாண்டி, போராடித்தான் காவிரித் தாய், தமிழகம் வந்து பாய்கின்றாள். இருந்தும் கர்நாடகம் முழுவதும் எத்தனை பதற்றம்? கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் பலவும் தீக்கிரையாக்கப்படுவது தொடங்கி, தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த விக்னேஷ் என்னும் வாலிபன் தன்னுயிரையே மாய்த்துக் கொண்டது வரை பட்டியல் போட இங்கே சங்கதிகள் அதிகம்.


காவிரியில் தமிழகத்தின் உரிமையை கன்னடர்கள் மறுப்பதற்கு கண்டனக்குரல்கள் நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் தமிழக அரசும் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அவைகளில் முக்கியமான ஒன்றாக மாறி நிற்கின்றது குமரி மாவட்டத்தின் நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 22 September 2016

கொல்லும் சினம்(சிறுகதை)


siragu-kollum-sinam3

மற்றவர்களைப் போன்று கிடையாது. ராமுவின் பாகன் அதனை நன்றாகவே கவனித்துக் கொண்டான். ஒருசிலரைப் போன்று பாகன் ராமுவை இரவல்பெற அழைத்துச் செல்லமாட்டான். கோவில் விழாக்கள், திருமண வைபவங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே கூட்டிச்செல்வான். அதில் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியையும் பாகன் ராமுவுக்கே செலவு செய்வான். பாகனுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உண்டு. அவனது மூதாதையர்கள் வழியாக வந்த சொத்து அது. மலையடிவாரத்தில் அமைந்த அந்தத்தோட்டத்தில், ஒரு சிறுபகுதியில் மட்டும் வீடுகட்டிக்கொண்டு பாகன் தன்மனைவி குழந்தைகளோடு வசித்து வந்தான். தோட்டத்தின் மற்றப்பகுதிகள் அனைத்தும் ராமுவுக்குத்தான் சொந்தம். ராமு தோட்டம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றிவரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 21 September 2016

அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன்


siragu-nayyaandi1

அங்கதம் என்பதன் பொருள் நையாண்டி எனப்படும். யாரேனும் ஒருவரையோ, ஒரு கருத்தாக்கத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ பழித்து, பகடி செய்து, கிண்டல், கேலி செய்து எழுதுவது அங்கதம் எனப்படும். இந்த அங்கதம் என்னும் இலக்கிய முறை, தொன்று தொட்டு அனைத்து மொழியிலும், அனைத்துப் பண்பாட்டிலும், உலகம் முழுவதும் எல்லோராலும் விரும்பப்படும் ஓர் நகைச்சுவை மிகுத்த இலக்கிய எழுத்து நடை. மேலும், அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சமுதாயத்தில் வேரூன்றி, நிலைபெற்று, நடைமுறையாகிவிட்ட ஒரு அதிகாரக்கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கிலும் அங்கதம் பயன்படுத்தப்படும். அதுபோன்றே, புரையோடிப்போன ஒரு அரசியலமைப்பை, ஆதிக்கவர்கத்தை அசைத்துப் பார்க்கும் நோக்கிலும் அங்கதம் துணிவுமிக்க எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 20 September 2016

சங்க இலக்கியம் : கலித்தொகையில் தொழில்முறைகள்


siragu-tholil-muraigal1

உழைப்பு என்பது மூளையையோ உடலையோ முழுவதுமாகவோ, பகுதியாகவோ வருத்தி ஏதோ ஒன்றைப் படைத்தற்காகச் செய்கின்ற செயலைக் குறிக்கும். ஆனால் அந்தச் செயலிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை உழைப்பு உள்ளடக்கியது. இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும். கல்வி, அறிவில்லாத தொழிலாளர்களின் உற்பத்தி, முயற்சிகளும், கைத்தொழில் கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள், வணிகர்கள், நுண்கலைஞர்கள், இலக்கிய அறிஞர்கள், மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் பணி முயற்சிகளும் இலக்கணத்தினுள் அடங்குகின்றன என்று கலைக்களஞ்சியம குறிப்பிடுகின்றது.

தேனெடுத்தல்:

siragu-tholil-muraigal2


குறிஞ்சி நிலத்தில் மரங்கள் மிகுந்து இருப்பதால் மரங்களில் தேன் மிகுந்து காணப்படும். குறிஞ்சி நில ஆடவர் மரங்களில் தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். தேனினை எடுப்பதற்கு ஏணியை பயன்படுத்தினர். மிக உயர்ந்த மரங்களில் உள்ள தேனை எடுப்பதற்கு கனுக்களில் அடி (கால்) வைத்து ஏறியிறங்கும் படி அமைந்துள்ள மூங்கிலாகிய ஏணியை பயன்படுத்தினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 19 September 2016

யாழினியும் மகிழனும்


siragu-yaaliniyum1

யார் இந்த யாழினியும், மகிழனும்? எங்கிருக்கிறார்கள்? அவர்கள் என்ன காரணத்திற்காக தற்பொழுது உங்கள் முன் தோன்றி இருக்கிறார்கள்? என்ற எண்ணங்கள் உங்களைச் சுற்றி கவராயம் இல்லாமல் வட்டம் போட்டுக்கொண்டு இருக்கும். அவர்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தவர்கள்தான், அவர்களைப் பற்றி பிறகு பார்க்கலாம். இப்பொழுது வாருங்கள் கற்பனையில் சற்றே  பிரேசில் நாடு வரைக்கும் சென்று வரலாம்.
siragu-yaaliniyum3


பிரேசில் என்று சொன்னவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரியோ-டி-ஜெனிரோ தான். ஏனென்றால் அந்த அளவிற்கு பழக்கப்பட்டு, அடிக்கடி சென்று வந்த மதுரை போலவோ, நெல்லை போலவோ நமக்குள் ஒன்றறக் கலந்துவிட்டது என்றே சொன்னாலும் மிகையில்லை. அதற்கான காரணம் ஒலிம்பிக் விளையாட்டையே சாரும். எத்தனை நாடுகள், எவ்வளவு விளையாட்டுகள், என்ன என்ன ஆரவாரம் பார்ப்பதற்கே பரவசம் தான். அங்கே விளையாடுபவர்களை விட, இங்கே அதைக் காண்பவர்கள் படும் உணர்ச்சிவசம்தான் மேற்கோள். இருக்கையின் முன் வந்து கண்களை அகல விரித்து அந்த ஓரிரு நிமிடங்கள் இவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடவோ, தாவவோ ஆரம்பித்து விடுகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும் – தொடர் – 2

Saturday 17 September 2016

எழுபதாயிரம் கிராமங்கள்(கவிதை)


siragu-ezhupadhaayiram3
எழுபதாயிரம் கிராமங்களில்
இந்தியாவின் இதயம்
துடித்துக் கொண்டிருப்பதாக
என்றோ சொன்னார்
சுட்டுக் கொல்லப்பட்ட
அந்த சுத்தாத்மா

ஆம் ! அது துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
குற்றுயிராக, எழுபதாயிரம் கிராமங்களில் !
உயிர் முற்றிலும்  போய்விட்டால்
யார் போடுவார்கள் வோட்டு?
கடன் தள்ளி சலுகை வீசி
இலவசங்களைவிட்டெறிந்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21468

Wednesday 14 September 2016

நற்றிணையில் விளிம்புநிலை மாந்தர்


siragu-natrinai5

சமுதாய விலக்கல் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கப்பெற வேண்டிய கல்வி, சுகாதாரம், இருப்பிடம், சமுதாய மதிப்பு ஆகியவற்றில் ஏற்படும் தடைகள் அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது குறிப்பிட்ட குழுவுக்குக் கிடைக்காமல் இருப்பது என்பதை முன்வைப்பதாகும். குறிப்பிட்ட இனத்தை, குறிப்பிட்ட குழுவை விலக்கும்  சமுதாய விலக்கலுக்குப்  பரந்துபட்ட காரணங்கள் பல இருக்கும். இனச்சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குற்றவாளிகளாக ஆனவர்கள், அகதிகள் போன்ற பலரை உள்ளடக்கியது இந்தச் சமுதாய விலக்கல் என்ற முறை. இந்த விலக்கல் என்பது பலதரப்பட்ட வழிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக சமுதாயத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது என்று சமுதாய விலக்கலுக்கு வரையறை தரப்படுகின்றது.

சங்க காலச் சமுதாயமும் ஒரு கூட்டமைப்புச் சமுதாயம். இக்கூட்டமைப்புச் சமுதாயத்தில் பல்வேறுபட்ட ஏற்ற இறக்கங்கள் அமைந்திருந்திருக்கின்றன. சமுதாய நிலையில், வருண அடிப்படையில், பொருளாதார அடிப்படையில், செய்யும் தொழில் அடிப்படையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. சங்ககாலச் சமுதாயத்தில் இவ்வேற்ற இறக்கங்கள் இருந்தது என்பதும் அவை பாடல்களாக பதியவைக்கப்பெற்றுள்ளன என்பதும் சங்க இலக்கியங்களின் உண்மைத்தன்மையை, அவற்றைப் படைத்த புலவர்களின் நேர்மையை  உணர்த்துவனவாக உள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21467

Tuesday 13 September 2016

பயனில செய்யாமை


siragu-payanilaa6

இது ஒரு ‘வெட்டிவேலை’ என்ற சொல்லாடல் பொதுவாக இன்றைய வழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் நாம் குறிப்பிட விரும்பும் கருத்து; இது ஒரு தேவையற்ற வேலை, இதனைச் செய்வதினால் பலன் ஒன்றும் இருக்காது, இதைச் செய்வதால் எந்த ஒரு பயனையும் அந்த வேலையைச் செய்பவர் அடையப்போவதில்லை என்பது போன்ற பொருளில் அமைந்திருக்கும். அதாவது, ஒரு ‘பயனற்ற செயல்’ அல்லது ‘பயனற்ற வேலை’ என்பது வெட்டிவேலை. வெட்டி முயற்சி என்று குறிப்பிடும் பொழுது, அந்த முயற்சி பலன் தராது என்று அறியப்படுகிறது.


அதைப்போலவே, எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களை ‘வேலைவெட்டி’ இல்லாதவர் என்றும் சொல்வோம். ‘வெட்டிவேலை’ என்பதற்கும் ‘வேலைவெட்டி’ என்பதற்கும் உள்ள வேறுபாடே வேலையும் வெட்டியும் இடம் மாறிவிடுவதுதான். வேலைவெட்டி இல்லாதவரை நாம் பயனற்றவர், அவரால் எந்த பலனும் கிடையாது என்ற பொருளில் தான் குறிப்பிடுகிறோம். அதாவது, இங்கு மீண்டும் நாம் ‘பயன்’ குறித்த பொருளில்தான் வேலைவெட்டி என்பதையும் கையாளுகிறோம். வேலைவெட்டி இல்லாதவர்களை ‘வெட்டி ஆபீசர்’ என்று நையாண்டி செய்யும் நிலைமையும் உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 12 September 2016

பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் – ஓர் அலசல் !!


siragu-pennukku-edhiraana1
சோனாலி, பிரான்சினா எனத் தொடர்ந்து ஒரே நாளில் பெண்கள் ஒருதலைக் காதலால் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றது. முதலில், ஒருதலைக் காதல் என்ற வாக்கியமே தவறு. காதல் என்றால் அன்பு, நட்பு தவிர வேறொன்றுமில்லை. அன்பும், நட்பும் ஒரு பெண் தன்  காதலை நிராகரித்தால் அந்தப் பெண்ணை கொலை செய்யத் தூண்டுகிறது என்பது அயோக்கியத்தனம். இங்கே பெண்ணுக்கு எதிரான வன்முறைகள், கொலைகள் நடக்கக் காரணம் ஒரு பெண் என்பவள் ஆணின் உடைமையாக, காம பிண்டமாக, தனக்குக் கிடைக்காத அந்தப் பெண் வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனப்பிறழ்வால் நடக்கிறதே தவிர்த்து, அந்த ஆணின் அன்பால், காதலால்  கொலை நடைபெற்றது என்பதுபோல் நாம் செய்தி போடுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு காதல் பற்றிய புரிந்துணர்வு இருக்கின்றதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21465

Saturday 10 September 2016

கவிதைச்சோலை(பாதயாத்திரைகள்: சமாதானத்துக்கு மரணப்பொறி!, சுதந்திரம் வேண்டும்!)


பாதயாத்திரைகள்: சமாதானத்துக்கு மரணப்பொறி!

-ராஜ் குணநாயகம்
2nd jan 16 newsletter1-1

பண்டா செல்வா ஒப்பந்தத்தை
கிழித்தவை
தனிச்சிங்கள சட்டம்
வரைந்தவை
கறுப்பு ஜூலைக்கு
வித்திட்டவை
யாழ் நூலகத்தை
எரித்தவை
இணைந்த வடக்கு கிழக்கை
பிரித்தவை
பல சமாதான ஒப்பந்தங்களை கிழித்து
புதைத்தவை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21446

Friday 9 September 2016

அவசியமே அத்யாவசியம்


Siragu avassiyam2

வாழும் வாழ்க்கையில் உறவுகளுக்குள்ளும், சமூகத்திற்குள்ளும்  பலதரப்பட்ட முரண்கள் ஏற்படுகின்றன. ஏற்படுகின்றன  என்பதை விட ஏற்படுத்திக்கொள்கிறோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. இங்கே நாம் வாழ்வதற்கு எவையெல்லாம் முக்கியமாக  வேண்டுமோ அவையெல்லாம் நமது தேவைகள் அன்றி எவையெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் தேவைகள் என்று சொல்லுதல் நலமன்று. இப்படிச் சிந்தித்ததன் விளைவுதான் நாம் பலதரப்பட்ட மனச் சுமைகளில் உழன்று கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணமாகவும் இருக்கிறது.


நம்மில் பலருக்கு, தேவை என்பதற்கும்  வேண்டும் என்பதற்கும் இடையே அடிப்படைப் புரிதல்கள் இல்லாத நிலை நிலவி வருகிறது. இதை இப்படிப் பார்க்கலாம், ஒரு வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் தேவை என்று வைத்துக் கொண்டால் அது வாங்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் அதே சமயத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இருசக்கர வாகனங்கள் வேண்டும் என்பதில்  முரண்பாடுகள் எழுகிறது. ஏனென்றால் அது அவசியமற்ற ஒன்றும் கூட. தேவைகளை அறிந்து எப்பொழுதெல்லாம் நீங்கள் செயலாற்றுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் அங்கு துன்பத்திற்கு இடம் இருப்பதில்லை. மாறாக உங்கள் விருப்பத்திற்கு இணங்கி வேண்டும் என்பதற்கு மறுப்பின்றி செவிசாய்க்கும் பொழுதுகளில்தான் சில கசப்புகளைத் தேடிப்போய் சுவைக்க வேண்டியதாய் இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 7 September 2016

ஆணவக் கொலை அழைப்பு மையம்


Siragu aanavakkolai2

வணக்கம் ஆணவக்கொலை அழைப்பு மையம்.
என் பெயர் சிவப்பி. தங்களுக்கு எப்படி உதவ முடியும்?
வணக்கம் அம்மா. நான் மாடப்புரத்தில் இருந்து காசி 112 பேசுகிறேன் அம்மா.
சிவப்பி: வணக்கம் காசி 112 ஐயா. உங்கள் பெயரே காசி 112 ஆ? புதிய பெயர் முறையாக இருக்கின்றதே.

காசி 112: காசி தான் அம்மா எனது பெயர், 112 எனது சாதி. இப்பொழுது சாதி பெயரை முகநூல் மற்றும் வாட்சப்பில் வைத்தால் சில அதிகப்பிரசங்கிகள் வம்பிழுக்கின்றார்கள் என்று நாங்கள் சாதிகளை எண்களாக எழுதி வருகின்றோம். நீங்கள் கூகுளில் சாதி எண் கொடுத்தால் சாதி பெயர் மற்றும் ஆண்ட வரலாறு எல்லாம் பெரிய தகவல்கள் மூலம் ஆராய்ந்து எளிதான தகவலாகக் கிடைக்குமே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும்?

பொறியியல் கல்வி நான் அதிகமாக நேசித்து கற்ற கல்வி, பள்ளிக் கல்வியில் கணிப்பொறியியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து விட்டு, மேலும் நான்காண்டுகள் இளங்கலைக் கணிப்பொறியியலில் பட்டம் பெற்று, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றேன்.
Siragu engineering education1

பொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா என்னும் வழிகாட்டித் தொடரை எழுதத் தூண்டியதே நம் தமிழகத்தில் நடந்த நிகழ்வு ஒன்று தான்.


மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் லெனின் அவர்களது இறப்பு தான், இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. கடந்த ஆண்டு பொறியியல் கல்வி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளம் பொறியாளர். லெனின் மத்திய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்று, பொறியியல் கல்வி பயின்று கடந்த ஆண்டுதான் கல்லூரியை விட்டு வெளிவந்துள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 6 September 2016

சிறகு தலையங்கம்


அண்மையில் ஓர் அருமையான கவிஞரின் மறைவு நம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. ஆனந்த யாழை தம் தங்கத்தமிழில் மீட்டிய கவிஞர் நம்முடன் இன்றில்லை என்பதை நம்பமுடியவில்லை. சிறிய காலத்தில் அழகான தமிழில் நம்மை ஆட்கொண்டவர் இன்றில்லை. இந்த இளம் வயதில் மற்றொரு உலகைக்காண ஏன் அத்துனை அவசரமோ? உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளாதது ஒரு காரணம் என்று அறிகிறோம். இந்தக் குற்றச்சாட்டிற்கு நம்மில் பெரும்பாலோர் உள்ளாவர் என்பதுதான் உண்மை. ஏன் இந்த நிலை, உடல்நிலைக்கு ஒவ்வாத உணவை ஏன் உண்டு மாள வேண்டும்? சரியான உடற்பயிற்சியின்மை இதற்கு பெருங்காரணம். இந்த துக்க நிகழ்வை ஒரு பெரும்பாடமாக எடுத்துக்கொண்டு நம் வாழ்க்கை முறையினை மாற்றுவது மிக முக்கியம்.
Siragu Thalayangam sports2

கடந்த சில வாரங்களாக உலக மக்களின் கவனம் பிரேசிலின் ரியோ நகரில் இருந்தது. ஒரு கோடி இந்திய மக்களின் ஏக்கமும் நம் கண் முன்னால் தெளிவாகத் தெரிந்தது. கோடி மக்களில் ஒரு சிலராவது பதக்கம் வென்று வருவாரா என்கிற ஏக்கமிது. சிறு சிறு நாடுகளும் பல பதக்கங்களை வென்று வாகை சூடியக் காட்சி நம் அனைவர் நெஞ்சையும் கவர்ந்தது. உசேன் சாதனைகள் தொடர்ந்தது. பிரிட்டன் சீனாவையும், உருசியாவையும் மிஞ்சி இரண்டாவது நிலையை அடைந்தது ஒரு பெரும்சாதனை. ஆனால் இந்தியாவிற்கு இரு பதக்கங்கள், வெள்ளியொன்றும், வெண்கலமொன்றும் பெரும் போராட்டத்தின் முடிவில் இரு பெண்கள் வென்று உலக அரங்கில் நம் மானத்தைக் காப்பாற்றினர். அவர்களைக் கொண்டாடுவது நம் கடமை. ஆனால்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 5 September 2016

திருப்பம்(சிறுகதை)


criminal law

“மாதவா,  மாதவா என்று அழைத்துக் கொண்டே, தன் மீசையை நீவிவிட்டபடி அன்றைய தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார்  குமாரவேலன் .”
“இதோ வந்துட்டேன் சார்”, என்று கூறிக்கொண்டே வழக்கு கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டு ஓடினான் எழுத்தர் மாதவன்.
“என்ன மாதவா? நாளைக்கு திங்கட்கிழமை செங்கல்பட்டில் அந்த வேலனின் கொலை வழக்கு வருது, ஞாபகம்  இருக்குல்ல. அந்த கோப்பெல்லாம் எடுத்து வைச்சிட்டியா? காலைல பத்து மணிக்கெல்லாம் அங்க இருக்கணும்.”

“எல்லாம்  சரியா வச்சிருக்கேன் சார். நீங்க கவலைப்படாதீங்க. நாளைக்கு சைதாப்பேட்டையில் அந்த நாராயணின் பிணை வழக்கு வருது. அத நான் நம்ம ரவி வக்கீல்கிட்ட சொல்லிப் பாத்துக்கறேன் சார். நீங்க செங்கல்பட்டு போயிட்டு வாங்க.”

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இந்தியப் பொருளாதார மாற்றம் –இறுதிப் பகுதி


Siragu Indian Economy-L1

உலகத்திலேயே பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இந்தியா பெற்றிருந்தாலும், கல்லூரி வயது மாணவர்களில் 10 சதவீதத்தினருக்கே இவை இடமளிக்கின்றன. (மாறாக, சீனா கல்லூரி வயது இளைஞர்களில் 20 சதவீதத்தினருக்கேனும் இடமளிக்கிறது. அமெரிக்காவில் 80 சதவீதத்தினர் கல்லூரிக்குச் செல்கின்றனர்.)


இந்தத் தர்க்கம், இந்தியாவின் அடித்தள யதார்த்தங்களைப் புறக்கணிக்கிறது என்பதுதான் பிரச்சினை, தனியார்மயத்திற்கு ஆதரவாக வாதிடுவோர், அரசாங்கம் தொடக்கநிலை, இடை நிலைக் கல்வியில் கவனம் செலுத்துவது சமநிலையை உயர்த்தும், கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியைத் தனியாரிடம் விடவேண்டும் என்ற உலக வங்கியின் பழமைக் கொள்கையை ஏற்கிறார்கள். 1997இல் இந்திய அரசாங்கம் இந்தத் தர்க்கத்தை ஏற்றுக்கொண்டது. தொடக்கநிலைக் கல்விக்கு அப்பாலுள்ள கல்வி, அரசு தலையிடத் தகுதிபெறாத சேவை என அறிவித்தது. உயர்கல்விக்கு வழங்கப்படும் மானியம் அநியாயமானது என்றும், கல்லூரியில் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவுசெய்து படிக்க வேண்டிய பணக்காரர்களுக்கு ஆதரவானது என்றும் வாதிட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 2 September 2016

நாளை நமதே!


Siragu positive thinking3

நாளையும் சரி, நாளும் சரி என்றும் நமதே தான். ஆனால் நாளை நமதே என்பதை பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். நீங்கள் நினைக்கும் அந்த நாளை நமதே என்பதன் அர்த்தம் இன்றை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே புரியும், அவர்களால் மட்டுமே அதன் மகத்துவத்தையும் உணர முடியும். செய்யும் வேலை துவங்கி சிறு சிறு நிகழ்வுகள் வரை இன்றை யார் யார் விரயம் செய்கிறார்களோ, அவர்களால் தான் அந்த நாளையை நமதாக்க முடியும் என்பதே ஆகச்சிறந்த உண்மை.


நாளைக்குச் செய்வோமென்று இன்றைக் கொன்றுவிடாதே! அதென்ன இன்றைக் கொல்வது என்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம். சிலர் எப்பொழுது எடுத்தாலும் சில வேலையைச் செய்யும் பொழுது நாளைக்குப் பார்த்துக் கொள்வோம், நாளைக்கு முடித்துக் கொள்வோம் என்றவாறாக நினைத்து இன்றைய பொழுதை உதாசீனம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் அடுத்த நாள் வந்தால் அந்த வேலையை அதே போல அதற்கு அடுத்த நாளிற்கு தள்ளிப் போடுவதை வாடிக்கையாய்க் கொண்டவர்கள். இவ்வாறு நேரத்தின் அருமையை உணராமல் நாளை நாளை என்று ஒவ்வொரு இன்றையும் கொன்று புதைப்பவர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.