அங்கதம் என்பதன் பொருள் நையாண்டி
எனப்படும். யாரேனும் ஒருவரையோ, ஒரு கருத்தாக்கத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ
பழித்து, பகடி செய்து, கிண்டல், கேலி செய்து எழுதுவது அங்கதம் எனப்படும்.
இந்த அங்கதம் என்னும் இலக்கிய முறை, தொன்று தொட்டு அனைத்து மொழியிலும்,
அனைத்துப் பண்பாட்டிலும், உலகம் முழுவதும் எல்லோராலும் விரும்பப்படும் ஓர்
நகைச்சுவை மிகுத்த இலக்கிய எழுத்து நடை. மேலும், அங்கதம் இலக்கியத்தின்
அடிப்படை இயல்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சமுதாயத்தில் வேரூன்றி,
நிலைபெற்று, நடைமுறையாகிவிட்ட ஒரு அதிகாரக்கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும்
நோக்கிலும் அங்கதம் பயன்படுத்தப்படும். அதுபோன்றே, புரையோடிப்போன ஒரு
அரசியலமைப்பை, ஆதிக்கவர்கத்தை அசைத்துப் பார்க்கும் நோக்கிலும் அங்கதம்
துணிவுமிக்க எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment