இது ஒரு ‘வெட்டிவேலை’ என்ற சொல்லாடல்
பொதுவாக இன்றைய வழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் நாம் குறிப்பிட
விரும்பும் கருத்து; இது ஒரு தேவையற்ற வேலை, இதனைச் செய்வதினால் பலன்
ஒன்றும் இருக்காது, இதைச் செய்வதால் எந்த ஒரு பயனையும் அந்த வேலையைச்
செய்பவர் அடையப்போவதில்லை என்பது போன்ற பொருளில் அமைந்திருக்கும். அதாவது,
ஒரு ‘பயனற்ற செயல்’ அல்லது ‘பயனற்ற வேலை’ என்பது வெட்டிவேலை. வெட்டி
முயற்சி என்று குறிப்பிடும் பொழுது, அந்த முயற்சி பலன் தராது என்று
அறியப்படுகிறது.
அதைப்போலவே, எந்த ஒரு வேலையும் செய்யாமல்
இருப்பவர்களை ‘வேலைவெட்டி’ இல்லாதவர் என்றும் சொல்வோம். ‘வெட்டிவேலை’
என்பதற்கும் ‘வேலைவெட்டி’ என்பதற்கும் உள்ள வேறுபாடே வேலையும் வெட்டியும்
இடம் மாறிவிடுவதுதான். வேலைவெட்டி இல்லாதவரை நாம் பயனற்றவர், அவரால் எந்த
பலனும் கிடையாது என்ற பொருளில் தான் குறிப்பிடுகிறோம். அதாவது, இங்கு
மீண்டும் நாம் ‘பயன்’ குறித்த பொருளில்தான் வேலைவெட்டி என்பதையும்
கையாளுகிறோம். வேலைவெட்டி இல்லாதவர்களை ‘வெட்டி ஆபீசர்’ என்று நையாண்டி
செய்யும் நிலைமையும் உள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment