வாழும் வாழ்க்கையில் உறவுகளுக்குள்ளும்,
சமூகத்திற்குள்ளும் பலதரப்பட்ட முரண்கள் ஏற்படுகின்றன. ஏற்படுகின்றன
என்பதை விட ஏற்படுத்திக்கொள்கிறோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. இங்கே
நாம் வாழ்வதற்கு எவையெல்லாம் முக்கியமாக வேண்டுமோ அவையெல்லாம் நமது
தேவைகள் அன்றி எவையெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் தேவைகள் என்று சொல்லுதல்
நலமன்று. இப்படிச் சிந்தித்ததன் விளைவுதான் நாம் பலதரப்பட்ட மனச் சுமைகளில்
உழன்று கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணமாகவும் இருக்கிறது.
நம்மில் பலருக்கு, தேவை என்பதற்கும்
வேண்டும் என்பதற்கும் இடையே அடிப்படைப் புரிதல்கள் இல்லாத நிலை நிலவி
வருகிறது. இதை இப்படிப் பார்க்கலாம், ஒரு வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம்
தேவை என்று வைத்துக் கொண்டால் அது வாங்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் அதே
சமயத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இருசக்கர வாகனங்கள் வேண்டும்
என்பதில் முரண்பாடுகள் எழுகிறது. ஏனென்றால் அது அவசியமற்ற ஒன்றும் கூட.
தேவைகளை அறிந்து எப்பொழுதெல்லாம் நீங்கள் செயலாற்றுகிறீர்களோ
அப்பொழுதெல்லாம் அங்கு துன்பத்திற்கு இடம் இருப்பதில்லை. மாறாக உங்கள்
விருப்பத்திற்கு இணங்கி வேண்டும் என்பதற்கு மறுப்பின்றி செவிசாய்க்கும்
பொழுதுகளில்தான் சில கசப்புகளைத் தேடிப்போய் சுவைக்க வேண்டியதாய்
இருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment