நெய்யாறு பிரச்சினைக்கு மாற்றுவழி காட்டும் முல்லையாறு அணைத் திட்டம்.
தமிழகம், கர்நாடக மாநிலங்கள் பதை
பதைத்துக் கிடக்கின்றது. நீதிமன்ற வழிகாட்டுதலையும் தாண்டி, போராடித்தான்
காவிரித் தாய், தமிழகம் வந்து பாய்கின்றாள். இருந்தும் கர்நாடகம் முழுவதும்
எத்தனை பதற்றம்? கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் பலவும்
தீக்கிரையாக்கப்படுவது தொடங்கி, தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த
விக்னேஷ் என்னும் வாலிபன் தன்னுயிரையே மாய்த்துக் கொண்டது வரை பட்டியல் போட
இங்கே சங்கதிகள் அதிகம்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை
கன்னடர்கள் மறுப்பதற்கு கண்டனக்குரல்கள் நாம் எழுப்பிக் கொண்டிருக்கும்
இந்த நிலையில்தான் தமிழக அரசும் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய
சூழல் எழுந்துள்ளது. அவைகளில் முக்கியமான ஒன்றாக மாறி நிற்கின்றது குமரி
மாவட்டத்தின் நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment