நாளையும் சரி, நாளும் சரி என்றும் நமதே
தான். ஆனால் நாளை நமதே என்பதை பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். நீங்கள்
நினைக்கும் அந்த நாளை நமதே என்பதன் அர்த்தம் இன்றை சரியாகப்
பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே புரியும், அவர்களால் மட்டுமே அதன்
மகத்துவத்தையும் உணர முடியும். செய்யும் வேலை துவங்கி சிறு சிறு நிகழ்வுகள்
வரை இன்றை யார் யார் விரயம் செய்கிறார்களோ, அவர்களால் தான் அந்த நாளையை
நமதாக்க முடியும் என்பதே ஆகச்சிறந்த உண்மை.
நாளைக்குச் செய்வோமென்று இன்றைக்
கொன்றுவிடாதே! அதென்ன இன்றைக் கொல்வது என்கிறீர்களா? வாருங்கள்
பார்க்கலாம். சிலர் எப்பொழுது எடுத்தாலும் சில வேலையைச் செய்யும் பொழுது
நாளைக்குப் பார்த்துக் கொள்வோம், நாளைக்கு முடித்துக் கொள்வோம் என்றவாறாக
நினைத்து இன்றைய பொழுதை உதாசீனம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் அடுத்த
நாள் வந்தால் அந்த வேலையை அதே போல அதற்கு அடுத்த நாளிற்கு தள்ளிப் போடுவதை
வாடிக்கையாய்க் கொண்டவர்கள். இவ்வாறு நேரத்தின் அருமையை உணராமல் நாளை நாளை
என்று ஒவ்வொரு இன்றையும் கொன்று புதைப்பவர்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment