யார் இந்த யாழினியும், மகிழனும்?
எங்கிருக்கிறார்கள்? அவர்கள் என்ன காரணத்திற்காக தற்பொழுது உங்கள் முன்
தோன்றி இருக்கிறார்கள்? என்ற எண்ணங்கள் உங்களைச் சுற்றி கவராயம் இல்லாமல்
வட்டம் போட்டுக்கொண்டு இருக்கும். அவர்கள் ஏற்கனவே உங்களுக்குத்
தெரிந்தவர்கள்தான், அவர்களைப் பற்றி பிறகு பார்க்கலாம். இப்பொழுது
வாருங்கள் கற்பனையில் சற்றே பிரேசில் நாடு வரைக்கும் சென்று வரலாம்.
பிரேசில் என்று சொன்னவுடனே அனைவருக்கும்
நினைவிற்கு வருவது ரியோ-டி-ஜெனிரோ தான். ஏனென்றால் அந்த அளவிற்கு
பழக்கப்பட்டு, அடிக்கடி சென்று வந்த மதுரை போலவோ, நெல்லை போலவோ நமக்குள்
ஒன்றறக் கலந்துவிட்டது என்றே சொன்னாலும் மிகையில்லை. அதற்கான காரணம்
ஒலிம்பிக் விளையாட்டையே சாரும். எத்தனை நாடுகள், எவ்வளவு விளையாட்டுகள்,
என்ன என்ன ஆரவாரம் பார்ப்பதற்கே பரவசம் தான். அங்கே விளையாடுபவர்களை விட,
இங்கே அதைக் காண்பவர்கள் படும் உணர்ச்சிவசம்தான் மேற்கோள். இருக்கையின்
முன் வந்து கண்களை அகல விரித்து அந்த ஓரிரு நிமிடங்கள் இவர்களும்
அவர்களுடன் சேர்ந்து ஓடவோ, தாவவோ ஆரம்பித்து விடுகிறார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment