அண்மையில்
ஓர் அருமையான கவிஞரின் மறைவு நம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
ஆனந்த யாழை தம் தங்கத்தமிழில் மீட்டிய கவிஞர் நம்முடன் இன்றில்லை என்பதை
நம்பமுடியவில்லை. சிறிய காலத்தில் அழகான தமிழில் நம்மை ஆட்கொண்டவர்
இன்றில்லை. இந்த இளம் வயதில் மற்றொரு உலகைக்காண ஏன் அத்துனை அவசரமோ?
உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளாதது ஒரு காரணம் என்று அறிகிறோம். இந்தக்
குற்றச்சாட்டிற்கு நம்மில் பெரும்பாலோர் உள்ளாவர் என்பதுதான் உண்மை. ஏன்
இந்த நிலை, உடல்நிலைக்கு ஒவ்வாத உணவை ஏன் உண்டு மாள வேண்டும்? சரியான
உடற்பயிற்சியின்மை இதற்கு பெருங்காரணம். இந்த துக்க நிகழ்வை ஒரு
பெரும்பாடமாக எடுத்துக்கொண்டு நம் வாழ்க்கை முறையினை மாற்றுவது மிக
முக்கியம்.
கடந்த
சில வாரங்களாக உலக மக்களின் கவனம் பிரேசிலின் ரியோ நகரில் இருந்தது. ஒரு
கோடி இந்திய மக்களின் ஏக்கமும் நம் கண் முன்னால் தெளிவாகத் தெரிந்தது. கோடி
மக்களில் ஒரு சிலராவது பதக்கம் வென்று வருவாரா என்கிற ஏக்கமிது. சிறு சிறு
நாடுகளும் பல பதக்கங்களை வென்று வாகை சூடியக் காட்சி நம் அனைவர்
நெஞ்சையும் கவர்ந்தது. உசேன் சாதனைகள் தொடர்ந்தது. பிரிட்டன் சீனாவையும்,
உருசியாவையும் மிஞ்சி இரண்டாவது நிலையை அடைந்தது ஒரு பெரும்சாதனை. ஆனால்
இந்தியாவிற்கு இரு பதக்கங்கள், வெள்ளியொன்றும், வெண்கலமொன்றும் பெரும்
போராட்டத்தின் முடிவில் இரு பெண்கள் வென்று உலக அரங்கில் நம் மானத்தைக்
காப்பாற்றினர். அவர்களைக் கொண்டாடுவது நம் கடமை. ஆனால்
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment