உழைப்பு என்பது மூளையையோ உடலையோ
முழுவதுமாகவோ, பகுதியாகவோ வருத்தி ஏதோ ஒன்றைப் படைத்தற்காகச் செய்கின்ற
செயலைக் குறிக்கும். ஆனால் அந்தச் செயலிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை
உழைப்பு உள்ளடக்கியது. இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில்
திறமைகளையும் உள்ளடக்கும். கல்வி, அறிவில்லாத தொழிலாளர்களின் உற்பத்தி,
முயற்சிகளும், கைத்தொழில் கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள்,
வழக்கறிஞர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள்,
வணிகர்கள், நுண்கலைஞர்கள், இலக்கிய அறிஞர்கள், மருத்துவர்கள், அறிவியல்
வல்லுநர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் பணி முயற்சிகளும் இலக்கணத்தினுள்
அடங்குகின்றன என்று கலைக்களஞ்சியம குறிப்பிடுகின்றது.
தேனெடுத்தல்:
குறிஞ்சி நிலத்தில் மரங்கள் மிகுந்து
இருப்பதால் மரங்களில் தேன் மிகுந்து காணப்படும். குறிஞ்சி நில ஆடவர்
மரங்களில் தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். தேனினை எடுப்பதற்கு ஏணியை
பயன்படுத்தினர். மிக உயர்ந்த மரங்களில் உள்ள தேனை எடுப்பதற்கு கனுக்களில்
அடி (கால்) வைத்து ஏறியிறங்கும் படி அமைந்துள்ள மூங்கிலாகிய ஏணியை
பயன்படுத்தினர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment