கல்வித்துறையில்
தற்போது தேவைப்படும் மாற்றம் எதுவெனில், மதிப்பிற்குரிய ஆழ்ந்த அறிவினை
உருவாக்கும் கோட்பாடு மட்டுமேயாகும். அனைத்துத் தரப்பு மாணவர்களின்
பின்புலத்தையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வடிவமைக்க வேண்டும். எல்லா
மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்விச் சூழலில், சமக்கல்வி வாய்ப்பளித்து
அவரவர் திறமை ஆற்றலுக்கேற்ப முழுமையான வளர்ச்சி பெற உதவுவதுதான் கல்வியின்
முக்கியச் சவாலாகும். பழங்காலக் கல்வியைவிட இக்காலக் கல்வி முறை சவால்
நிறைந்தது. காரணம் அனைவருக்கும் வேலை தருவது என்பது இயலாத நிலை. இக்கால
சமூகச் சவால்களை எதிர்நோக்கும் அளவில் அனைவரையும் உருவாக்குவது கல்விக்கு
விடுக்கப்பட்ட அறைகூவல். இந்தியாவில் தற்போது பல்வேறு வகையான கல்வி முறைகள்
நடைமுறையில் உள்ளன.
மத்திய நடுவண் அரசு மட்டுமின்றி மாநில
அரசுகளும் தங்களுக்கு என்று தனித்த கல்விக் கொள்கையைக் கொண்டு
செயல்படுவதால் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இதனால் மக்களிடையே எந்த
கல்விமுறை சிறந்தது என்ற குழப்பம் நிலவுகிறது.
மாநில
கல்வித்திட்ட முறையில் பயிலும் மாணவர்களுக்குமிடையே உயர்வு தாழ்வு
மனப்பான்மை தோன்றுகிறது. இவ்வாறன்றி மொழிப் பாடங்களைத்தவிர மற்ற அனைத்துப்
பாடங்களையும் நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டமாக வகுப்பதென்பது
உயர்வு-தாழ்வு மனப்பான்மையைப் போக்கும். இதனால் போட்டித் தேர்வுகள் என்பது
சிக்கலுக்குரியதாக இருக்காது. அதேபோல மாணவர்கள் கல்வி கற்கும் இடங்களில்
வேறுபாடு எதன் பொருட்டும் காணக்கூடாது என்பதும் சமூக நீதிக்கொள்கையாகும்.
என் மாணவர்களிடம் கல்வியில் என்ன சிக்கல்
உள்ளது என்று கேட்டபோது ‘கல்வியே இன்று சிக்கல்தான்’ என்று பதில்
தந்தார்கள். ‘ஏன் அப்படி?’ என்று கேட்டபோது புரியாத மொழியில் கல்வி, என்ன
படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்பது தெரியாமலேயே எதையோ படிப்பதாக
அந்நியப்பட்டு நிற்கும் வேலையில்லா சூழல்என்றார்கள்………
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.